Load Image
Advertisement

பாஜவுக்கு எதிரான மெகா கூட்டணி பற்றி ஆலோசனை

பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார், துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேஜஸ்வி யாதவ் ஆகியோர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தனர். மும்பையில் உள்ள உத்தவ் வீட்டில் சந்திப்பு நடந்தது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு எதிராக, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நிதிஷ்குமார். மெகா கூட்டணி அமைப்பதன் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் ஆகியோரை கூட்டணி தொடர்பாக ஏற்கனவே சந்தித்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் சந்திக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement