Load Image
Advertisement

சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

டில்லி அரசில் உயர் அதிகாரிகளை நியமிக்கவும் மாற்றவும் யாருக்கு அதிகாரம் என்பதில் கவர்னருக்கும் முதல்வருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக, ஆம் ஆத்மி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2019ல் மாறுபட்ட தீர்ப்புகளை கூறினர். இதனால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. அந்த அமர்வு ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து, வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. அதன் விவரம் வருமாறு: போலீஸ், பொது ஒழுங்கு, நிலம் ஆகியவற்றை தவிர மற்ற துறைகளில் டில்லி அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. டில்லி அமைச்சரவையின் முடிவுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கவர்னர் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் மக்கள் விருப்பங்களுக்கு ஏற்ப சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கு தான் உள்ளது. அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்குதான். அமைச்சர்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டு பதில் சொல்லாவிட்டால் ஒட்டுமொத்த பொறுப்புடைமை பாதிக்கப்பட்டு, பணிகள் முடங்கி விடும். ஜனநாயகமும் கூட்டாட்சியும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்புகள். எனவே, மக்கள் விருப்பங்களுக்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரம் டில்லி அரசுக்கு உள்ளது. எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரான அதிகாரச்சண்டையில், ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement