Load Image
Advertisement

இம்ரான் செய்த ஊழல் இவ்வளவு கோடியா? | போலீஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டார். அல்-காதர் டிரஸ்ட் ஊழல் வழக்கில் அவரை கைது செய்ததாக இஸ்லமாபாத் போலீசார் கூறினர். இம்ரானை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். அவரிடம் விசாரணை நடந்தது. இன்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்தனர். எல்லா பக்கமும் கட்டுக்கடங்காத கலவரம் நடப்பதால் ரகசிய இடத்தில் தற்காலிக கோர்ட் உருவாக்கப்பட்டது. அங்கு நீதிபதிகள் வந்தனர். இம்ரானும் அழைத்து செல்லப்பட்டார். அல்-காதர் ஊழல் வழக்கில் அவரை 14 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். கோர்ட் 8 நாள் அனுமதி கொடுத்தது. மீண்டும் ரகசிய இடத்துக்கு இம்ரான் கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது. போராட்டத்தை கைவிடக்கோரி பிடிஐ தொண்டர்களுக்கு போலீஸ் அழைப்பு விடுத்தது. இம்ரானை சும்மா கைது செய்யவில்லை. அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் தான் கைது செய்துள்ளோம். 5000 கோடி ரூபாயை அவர் மோசடி செய்துள்ளார் என்று போலீஸ் கூறியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement