Load Image
Advertisement

மா, சாத்துக்குடி 25,000 kg சிக்கியது..| கோவை மக்களுக்கு ஷாக் தந்த ரெய்டு

கோவை பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 8 குழுக்களாக பிரிந்து மாஸ் ரெய்டு நடத்தினர். வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி பழக்கடைகளில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். 45 கடை மற்றும் குடோன்களில் சோதனை நடந்தது. 16 கடைகளில் பெட்டி பெட்டியாக ரசாயனம் வைத்து பழங்களை பழுக்க வைத்திருந்தனர். பழங்கள், ரசாயன பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 22,500 கிலோ மாம்பழம், 2,500 கிலோ சாத்துக்குடியை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 12 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய். கைப்பற்றிய பழங்களை அழித்தனர். 16 கடை ஓனர்களுக்கும் நோட்டீஸ் விட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement