Load Image
Advertisement

6 மாதம் சஸ்பெண்ட் செய்தார் கோயில் அதிகாரி

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு, கோயிலில் விபூதி, குங்கும பிரசாதம் பாக்கெட்டுகளில் வழங்கப்படுகிறது. விபூதி தயாரிக்க தனியாக கூடம் உள்ளது. அங்கு, பாக்கெட் தயாரிக்க எந்திரம் உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பிரசாத பாக்கெட்டுகளையே பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் அவ்வாறு செய்வதில்லை. இதனால் கோயில் குருக்கள் சொந்த பணத்தில் தனியாரிடம் இருந்து பிரசாத பாக்கெட்டுகளை வாங்கி பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். 1000 விபூதி பாக்கெட்டுகளை 600 ரூபாய்க்கு வாங்குகின்றனர். பிரசாத பாக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள், தனியார் நிறுவனங்களின் விளம்பர வாசகங்களுடன் விபூசி பாக்கெட்டுகளை விற்கின்றனர். திருவண்ணாமலையில் உள்ள மேத்யூ கார்மென்ட் என்ற நிறுவனத்தினர், மதர் தெரசா படத்துடன், தங்கள் முகவரியை ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் படமும் உள்ள கவரை 'பிரின்ட்' செய்து கொடுத்துள்ளனர். அந்த கவருடன் கூடிய விபூதி பாக்கெட்டுகளை பக்தர்களுக்கு கோயில் குருக்கள் வினியோகம் செய்துள்ளனர். தெரசா படத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சிஅடைந்தனர். இதுபற்றி இந்து முன்னணி நிர்வாகி செந்தில், போலீசில் புகார் அளித்தார். கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர், தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement