Load Image
Advertisement

இந்திய வீரர்களுக்கு நன்றி வங்கதேச தளபதி உருக்கம்

சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் அகாடமி உள்ளது. இங்கு கடந்த 11 மாதங்களாக 186 ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில், இந்தியாவை சேர்ந்த 121 ஆண்கள். 36 பெண்கள் அடக்கம். பூடானை சேர்ந்த 5 ஆண், 24 பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவு விழா சனியன்று நடந்தது. வங்கதேச ராணுவ தலைமை தளபதி ஷஃபியுத்தீன் அகமது (shaffiuddin Ahmed) சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பயிற்சியில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி அவர் பேசியதாவது: இந்த நேரத்தில் 1971ல் நடந்த போரை நினைவுகூருகிறேன். வங்கதேச விடுதலைக்காக போராடிய இந்திய வீரர்களுக்கு நன்றி. ராணுவத்தினரின் வாழ்வு ஒவ்வொரு நாளும் சவாலானது. ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; தேசத்துக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஷஃபியுத்தீன் அகமது பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement