Load Image
Advertisement

டாஸ்மாக் மெஷினை தப்பா பேசாதீங்க... மீறினால் சட்ட நடவடிக்கை பாயுமாம்

தமிழகத்தில் 5,329 டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடக்கிறது. 101 வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகளும் செயல்படுகின்றன. இவற்றில் ஆளில்லா மது விற்கும் இயந்திரத்தை அமைக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் அந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் மதுவை தேர்வு செய்து பணத்தை செலுத்தினால் போதும் மது பாட்டில் தானாக வெளியே வரும். இதனால் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதை தடுக்க முடியும் என அரசு சொல்கிறது. ஆனால் இந்த மெஷின் மூலம் சிறுவர்கள் கைக்கு மது போகும். கட்டுபாடு இல்லாமல் கிடைப்பதால் மக்களிடையே மது பழக்கம் ஊக்கவிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு டாஸ்மாக் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. மது விற்பனையாகும் கடை மேனேஜர் முன்னிலையில் தான் மெஷின் இருக்கும். 21 வயதுக்கும் குறைவானவர்கள் மது வாங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மெஷின் செயல்படும். தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement