Load Image
Advertisement

130 இடங்களில் ஜெயிப்போம் என்கிறார் அண்ணாமலை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக, அங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். தற்போதுள்ள 113 இடங்கள் என்பதை தாண்டி, 130 இடங்களில் வெற்றி கிடைக்கும். மக்களிடம் ஆதரவு பெருகி உள்ளது. கர்நாடகாவில் டபுள் இன்ஜின் அரசின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள். கர்நாடகாவை பொருத்தவரை தற்போதுள்ள ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். 2014க்கு முன்புவரை நாட்டில் இப்படியொரு நிலை இருந்தது இல்லை என்று அண்ணாமலை கூறினார். தமிழக அரசியல் பற்றி பேசிய அவர், தனிப்பட்ட முறையில் எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எப்போதும் பிரச்னை இருந்தது இல்லை. சுமூகமாகதான் பணியாற்றி வருகிறோம். திமுகதான் எங்களின் பொது எதிரி என்று அண்ணாமலை சொன்னார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement