Load Image
Advertisement

பட்டாசு ஆலையில் இடி உடல் கருகி பெண் மரணம்

விருதுநகர் வி. ராமலிங்காபுரத்தில் சிவகாசி ஜெய்சங்கர் பட்டாசு ஆலை வைத்துள்ளார். நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. 50க்கு மேற்பட்ட அறைகளில், 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வியாழக்கிழமை காலை இடியுடன் மழை பெய்தது. இடி தாக்கியதில், பட்டாசுகளை அட்டை பெட்டியில் அடைக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. வில்லூரை சேர்ந்த 55 வயதான புஷ்பம் என்ற பெண் அதே இடத்தில் உடல் கருகி இறந்தார். தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement