Load Image
Advertisement

கர்நாடக மக்கள் சிந்தித்து செயல்படணும்: அமித்ஷா

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இது மிக முக்கியமான தேர்தல். நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்தால் ஊழல் பெருகிவிடும்; வன்முறை அதிகரிக்கும்; குடும்ப அரசியல் தலைதூக்கும். மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஓட்டு போட்டால், அது காங்கிரசுக்கு போடுவதாகத்தான் அர்த்தம்; தேர்தல் முடிந்ததும் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து விடும். 2018 தேர்தலில் என்ன நடந்தது என்பதை சிந்தித்து பார்த்து செயல்படுங்கள். கர்நாடகா ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைய பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைந்தாக வேண்டும்; கர்நாடகாவின் எதிர்காலத்தை பிரதமர் மோடியிடம் ஒப்படையுங்கள்; அவர் வளர்ந்த, வலிமையான கர்நாடகாவை உருவாக்கிக் காட்டுவார் என அமித் ஷா கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement