Load Image
Advertisement

கலெக்டரிடம் கண்ணீருடன் பெண் மனு

புருஷன் முகத்த கடைசியா ஒருமுறை காட்டிடுங்க சாமி.. டிஸ்க்: கலெக்டரிடம் கண்ணீருடன் பெண் மனு கள்ளக்குறிச்சி அருகே உள்ள கெங்கராயபாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன். வயது 43. மலேசியா மெட்டல் கம்பெனியில் 15 ஆண்டுகளாக வேலை செய்தார். 7 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்து சென்றார். கடந்த வாரம் உடன் வேலை செய்தவர்களுடன் நடந்த தகறாரில் பாண்டியன் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த மனைவி வளர்மதி, கணவனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரது உடலை மீட்டு தர வேண்டும் என விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். பிள்ளைகள், உறவினர்களுடன் கதறி அழுதபடி வந்த வளர்மதி, கடைசியாக ஒரு முறை என் கணவர் முகத்தை காட்டிடுங்க சாமி.. என கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கெஞ்சியதால் அந்த இடமே சோகமாக மாறியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement