Load Image
Advertisement

பொதுசெயலாளர் பழனிசாமி தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

பொதுக்குழு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அதிமுக பொது செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் இந்த பதவியை அங்கீகரிக்காமல் இருந்தது. எடப்பாடி பழனிசாமி டில்லி ஐகோர்ட்டில் வழக்குபோட்டார். வழக்கை விசாரித்த கோர்ட், பழனிசாமி மனு மீது தேர்தல் ஆணையம் 10 நாளுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்தது. 2022 ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் ஆணையம் ஒப்புதல் அளித்தது. கர்நாடக சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement