Load Image
Advertisement

ஹைவேசில் பைக் சாகசம் 2 இளைஞர்கள் பரிதாப பலி

நண்பன் சீரியஸ் ஒசூர் மத்திகிரியை சேர்ந்தவர்கள் சபரி, மொய்கான். இவர்களது நண்பர் கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவை சேர்ந்த ஹர்ஷா. இவர்கள் அடிக்கடி கிருஷ்ணகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். பந்தாரப்பள்ளி அருகே அதிகாலை பைக் சாகசத்தில் ஈடுபட்டபோது, 2 பைக்குகள் பயங்கரமாக மோதி கொண்டன. இதில் சபரி, ஹர்ஷா அங்கேயே பலியாகினர். மொய்கான் பலத்த காயமடைந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசம் செய்கின்றனர். போலீசார் கண்டுகொள்ளாததுதான் இன்றைய அசம்பாவிதத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறினர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement