Load Image
Advertisement

தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள்? : அமைச்சர் சட்டசபையில் புது தகவல்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டசபையில் கூறியுள்ளார்.

Latest Tamil News

தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. அதற்கடுத்து, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர். இந்நிலையில், கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட 8 நகரங்களை தனி மாவட்டங்களாக அறிவிக்க சட்டசபையில் கோரிக்கை எழுந்தது.

Latest Tamil News

இதற்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதில் அளித்து பேசியதாவது:



தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (16)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    தமிழகத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளே முப்பத்து ஒன்பதுதான் ஆனால் இருக்கப்போகும் மாவட்டங்களோ நாற்பத்திஆறு என்ன வினோதம் என்ன வேடிக்கை பிறகு பாராளுமன்றதோகுதி என்ற பெயரை நீக்கிவிட்டு மாவட்டவாராக எம்பிக்களை தேர்ந்தெடுக்கலாலாமே

  • ராஜா -

    பிரிப்பதற்கு மட்டும் தான் தெரியும்.

  • பைரவர் சம்பத் குமார் -

    1). ஜனத்தொகை பெருக்கம் நிர்வாகத் திறன் ஆகியவற்றுக்காக மாவட்டங்கள் மாநிலங்கள் உருவாகின்றது. 2) அதன் அடிப்படையில் பல்லவ தமிழ்நாடு, சோழ தமிழ்நாடு, கொங்கு தழிழ்நாடு மற்றும் பாண்டிய தமிழ்நாடு என்று மாற்றினால் நிர்வாகம் மற்றும் எல்லா மாவட்டங்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும். 3). சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களின் நெருக்கடியை குறைக்கலாம்.

  • Kamarajgunasekaran - Tanjore,இந்தியா

    மாவட்டமாக உருவாக்குவது அருமையான முடிவு.

  • kulandai kannan -

    தமிழ்நாட்டில் பீடா கடைகளை விட மாவட்டங்கள் அதிகமாகிவிட்டன

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement