Load Image
Advertisement

ஜெ. சொத்தில் பங்கு கேட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்

மைசூரை சேர்ந்தவர் வாசுதேவன், வயது 83. ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் உரிமை உள்ளது என ஐகோர்ட்டில் மனு செய்தார். என் பெற்றோர் ஜெயராம், ஜெயம்மா. இவர்களுக்கு நான் மட்டுமே வாரிசு. என் தந்தை வேதவல்லி என்பவரை 2வது திருமணம் செய்தார். அவர்களுக்கு ஜெயகுமார், ஜெயலலிதா பிறந்தனர். 1950ல் என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு கோர்ட்டில் என் அம்மா வழக்கு தொடர்ந்தார். வழக்கின்போது தந்தை இறந்ததால் வேதவல்லி, அவரது வாரிசுகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கு சமரசத்தில் முடிந்தது. ஜெயலலிதா இறப்புக்கு முன் அவருடன் பிறந்த ஜெயகுமார் இறந்து விட்டார். இப்போது சகோதரர் என்ற முறையில் நான் தான் நேரடி வாரிசு. எனவே ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதியை பெற எனக்கு உரிமை உள்ளது எனவும் மனுவில் கூறி இருந்தார். ஏற்கனவே தீபா, தீபக் தான் சட்டப்பூர்வ வாரிசு என தீர்ப்பு இருப்பதால் தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆதார ஆவணங்கள் பெற ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. மனுவுக்கு பதில் அளிக்க தீபா, தீபக்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருவர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யாததால் வாசுதேவன் மனுவை விசாரணைக்கு ஏற்க மாஸ்டர் கோர்ட் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement