Load Image
Advertisement

அரசு பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை கே.பெரியபட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 138 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியை தரம் உயர்த்த கோரி 10ஆண்டாக ஊர் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். பலமுறை கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. பள்ளியை தரம் உயர்த்தாமல் அதி்காரிகள் காலம் கடத்தி வருவதை உணர்ந்த ஊர் மக்கள், மாணவர்களுடன் பள்ளி முன் உண்ணாவிரதம் இருந்தனர். உங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தவிட்டால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement