Load Image
Advertisement

பல துறைகளில் சாதித்த மகளிருக்கு இளம் குரல் சிங்கப்பெண்ணே விருது

உலக மகளிர் தினத்தையொட்டி, இளம்குரல் அறக்கட்டளையின் 'சிங்கப்பெண்ணே' விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. கலை, கல்வி, சமூக சேவை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 25 மகளிருக்கு விருது வழங்கப்பட்டது. வில்லிவாக்கம் போலீஸ் எஸ்ஐ அபர்னா, கல்விப்பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரளா, எப்சிபா திரேசா, பத்மா, கீதா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. திரைப்பட இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகை ரேகா நாயர், சமூக சேவகர் கோபாலகிருஷ்ணன், மருத்துவ சேவகர் நரேஷ்குமார், சமூக ஆர்வலர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை மகளிருக்கு விருது வழங்கி கவுரவித்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும், மகளிருக்கான உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement