Load Image
Advertisement

நைசாக பேசி திருடிய டிப்-டாப் ஆசாமி

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் செல்லம்மாள். வயது 67. தனியார் பள்ளியில் துப்புரவு ஊழியராக வேலை பார்க்கிறார். வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றபோது செல்லம்மாளிடம் டிப்டாப் ஆசாமி நைசாக பேச்சு கொடுத்தார். இந்த ஏரியாவில் திருடர்கள் அதிகம்; கழுத்தில் போட்டுள்ள தங்க செயினை கழற்றி பையில் வைக்கும்படி பாசத்துடன் சொன்னார். அதை நம்பிய அவர், 2 சவரன் செயினை கழற்றி பைக்குள் வைக்க போனார். அவரை தடுத்த ஆசாமி, பாத்து பத்திரம் பாட்டி எனக்கூறி, செயினை வாங்கி ஒரு கவரில் மடித்து மூதாட்டி பையில் போட்டார். ரொம்ப நல்லவனா இருக்கானே என நினைத்தபடி பள்ளிக்கு சென்ற செல்லம்மாள், கவரை பிரித்தபோது உள்ளே செயின் இல்லை. நல்லவனா நடிச்சி ஏமாத்திட்டானே என புலம்பிய செல்லம்மாள் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement