Load Image
Advertisement

ஈரோடு மக்களுக்கு குவியும் பரிசுகள் இப்படி ஒரு இடைத்தேர்தலை பார்த்து இருக்க மாட்டோம்

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு கொஞ்சமும் சளைக்காமல் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு தீவிரமாக களம் இறங்கி போராடுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எப்படியும் ஐம்பதாயிரம் ஓட்டுக்களுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் எதிர்கட்சி வேட்பாளர் தென்னரசுவை வீழ்த்தி ஆக வேண்டும் என, தி.முக மொத்த பலத்தையும் பயன்படுத்தி வருகிறது. ஈரோட்டில் பிரதான பிரச்னையாக இருந்த சாலைகளை சரி செய்து இருக்கிறது ஆளும்கட்சி மூலை முடுக்குகளெல்லாம் புது தார் சாலை போட்டி இருக்கிறது. பல மாதங்களாக நிலவிய தண்ணீர் பிரச்னையையும் ஒரே வாரத்தில் தீர்த்து வைத்தது. இருந்த போதும், ஏற்கனவே சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றவில்லை என மக்கள் கொந்தளிப்பார்கள் என உணர்ந்து, அவர்களுக்கு அதை மறக்கடிக்க செய்யும் வேலையில் ஆளும்கட்சியினர் இறங்கி உள்ளனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் மூவாயிரம் ரூபாயை முதல் கட்டமாக கொடுத்து முடித்திருக்கிறது தி.மு.க. கூடவே வேட்டி-சேலையும் கொடுத்து உள்ளனர்.. பெரும்பாலானவர்களுக்கு குக்கரும் கொடுத்துள்ளனர். தென்னரசுவை ஜெயிக்க வைக்க வேண்டும்; குறைந்தபட்சம் இளங்கோவனின் ஓட்டு வித்தியாசத்தையாவது இருபதாயிரத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமியும் களம் இறங்கி கட்சியினரை முடுக்கி விட்டுள்ளார். தொகுதியின் வாக்காளராக இருக்கும் ஒவ்வொரு நபருக்கும், இது வரை இரண்டாயிரம் ரூபாய் அ.தி.மு.க., சார்பில் கொடுத்து முடித்துள்ளனர். தி.மு.க., கொடுத்தது போல வேட்டி-சேலையும் கொடுத்து இருக்கின்றனர். 90 சதவிகித பெண் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க., ஓட்டாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் , 15 ஆயிரம் மதிப்புள்ள ஆன்ராய்டு போன் கொடுத்துள்ளனர். இது தெரிந்ததும் ஒன்றரை லட்சம் ஆன்ராய்டு போனை, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டு செல்லும் தீவிரத்தில் தி.மு.க., தரப்பு களம் இறங்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் மக்கள் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விசைத்தறிக்கு மாதம் ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கப்படும் என அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தாது, குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுக்காதது உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க., மீது அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தி வருகின்றனர். அதையெல்லாம் சரிபடுத்த அடுத்த கட்டமாக, கூடுதலாகவும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய், வாட்ச் உளிட்ட வேறு சில பரிசுகளை கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு செல்லும்; பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும்; எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலராக்கப்பட்டது செல்லும் என்றெல்லாம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்னதும், எடப்பாடியார் கூடுதல் உற்சாகமாகி இருக்கிறார். மக்களும் தங்கள் பக்கமே இருக்கின்றனர் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக, குறைந்தபட்சம் வெற்றிக்கு நெருக்கமாக சென்று விட வேண்டும் என கட்சியினரிடம் சொல்லி, உற்சாகமாக களம் இறக்கி விட்டார். தி.மு.க.,வுக்கு இணையாக அல்லது கூடுதலாகவே மக்களை குஷிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார். போட்டிப் போட்டுக் கொண்டு பரிசுகள் அளிப்பதில் அ.தி.மு.க.,வும்; தி.மு.க.,வும் களம் இறங்கி இருப்பதால், ஈரோடு மக்கள், ஒவ்வொரு நொடியும் வீடு தேடி வரும் கட்சியினருக்கு காத்துள்ளனர். தொகுதி மக்களை தி.மு.க.,வினர் பட்டியில் அடைத்து மாலையில் ஐநூரு ரூபாய் வழங்கும் நபர்களுக்கு, அ.தி.மு.க., தரப்பில் பட்டியில் அடைக்காமலேயே இரவு நேரத்தில் வீடு தேடி வந்து முன்னூறு ரூபாய் கொடுக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் கடும் போட்டியில், மக்கள் குளிர் காய்கின்றனர். எத்தனையோ இடைத்தேர்தல்களை தமிழக சட்டசபை சந்தித்து இருக்கிறது. ஆனால், இப்படி ஒரு தேர்தலை இதுவரை சந்தித்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிகள் மீறப்பட்டு உள்ளது. இருந்த போதும், தேர்தல் அதிகாரிகளுக்கு இதெல்லாம் தெரிந்தும் அமைதியாக இருப்பது தான் வேடிக்கை. ஈரோடு தொகுதியில் நடக்கும் கூத்தை பார்க்கும் பக்கத்துக்கு தொகுதியினர், ஐயோ நாம அந்த தொகுதி வாக்காளராக இல்லாம போய் விட்டோமே என ஏக்க பெரு மூச்சு விடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement