Load Image
Advertisement

பெங்களூரு அணி கேப்டன் மந்தனா

பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பெங்களூரு அணிக்கு கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ஐ.பி.எல்., பாணியில் பெண்கள் பிரிமியர் லீக் முதல் சீசன் மார்ச் 4 முதல் 26 வரை நடக்கவுள்ளது. இதில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, டில்லி, லக்னோ என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீராங்கனைகள் ஏலம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக ரூ. 3.40 கோடிக்கு பெங்களூரு அணியில் ஒப்பந்தமானார். பெங்களூரு அணி, தனது முதல் போட்டியில் டில்லியை மார்ச் 5ல் சந்திக்கிறது. இந்நிலையில் பெங்களூரு அணிக்கு கேப்டனாக மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 113 சர்வதேச 'டி-20' போட்டிகளில் 20 அரை சதம் உட்பட மொத்தம் 2661 ரன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement