Load Image
Advertisement

பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் சூப்பர் ஐடியா!

ஸ்பீக்கரில் புலி சிங்கம் யானை சத்தம் தெறித்து ஓடும் காட்டுப்பன்றி கூட்டம் புதுச்சேரி அடுத்த பாகூர் சுற்றுவட்டாரத்தில் கரும்பு, மரவள்ளி, மணிலா, காய்கறிகள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. வயலில் இரவில் நுழையும் காட்டுப்பன்றி கூட்டம் விடிய, விடிய பயிர்களை தின்று அழித்து வருகின்றன. பன்றிகளை தடுக்க விவசாயிகள் பல வழிகளை கையாண்டும் பயன்தரவில்லை. வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வேலி, மருந்து தெளித்தல் போன்ற ஆலோசனைகளை வழங்கினர். அதுவும் கைகொடுக்கவில்லை. பன்றிகளை விரட்ட விவசாயி உமாசங்கர் ஒரு யுத்தியை கையாண்டார். நிலத்தை சுற்றிலும் ஸ்பீக்கர்களை பொருத்தினார். இரவு வயலைவிட்டு செல்லும்போது, ஸ்பீக்கர்களை ஆன் செய்துவிடுவார். அதில், சிங்கம், புலி, யானையின் சத்தம், தாரை தப்பட்டை, சைரன் ஒலி உள்ளிட்டவை அடுத்தடுத்து விடிய விடிய ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த சத்தம் பன்றிகளுக்கு அலர்ஜி என்பதால், அவை வயலுக்குள் நுழையாமல் ஓடிவிடுகின்றன. ஸ்பீக்கரில் வரும் சத்தத்திற்கு பயந்து 90 சதவீத பன்றிகள் வயலுக்கு வருவதில்லை. இருந்தாலும், இது நிரந்தர தீர்வு இல்லை. பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement