Load Image
Advertisement

சாதிப்பாரா 'சுழல்' வீரர் அஷ்வின்

இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் எதிர்பார்ப்பு டெஸ்டில் அதிவேகமாக 450 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் என சாதனை படைக்க காத்திருக்கிறார் அஷ்வின். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 9 ம் தேதி நாக்பூரில் துவங்குகிறது. இரு அணிகள் முதல் முறையாக 1947-1948ல் டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 0-4 என இழந்தது. இதுவரை இரு அணிகளும் இதுவரை 27 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. இந்திய அணி 10 முறையும், ஆஸ்திரேலியா 12 முறையும் வென்றன. ஐந்து தொடர் 'டிரா' ஆகின. இரு அணிகள் இடையிலான டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக ஸ்கோர் குவித்த அணியாக இந்தியா உள்ளது. சிட்னியில் 2004ல் நடந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் குவித்தது. ஒரே இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்கோரையும் இந்திய அணிதான் பதிவு செய்துள்ளது. அடிலெய்டில் 2020ல் நடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், அதிக முறை கேப்டனாக இந்தியாவின் தோனியே இருந்துள்ளார். இவர் 2008 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 13 போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார். அதே நேரம், ஒரு வீரராக அதிக போட்டிகளில் பங்கேற்ற பெருமை ஜாம்பவான் சச்சின் பெற்றுள்ளார். 1991 முதல் 2013 வரை இவர் 39 போட்டியில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலிலும் சச்சினே முதலிடம் வகிக்கிறார். இவர் 39 போட்டியில் 11 சதம், 16 அரை சதம் என மொத்தம் 3630 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு தொடரை பொறுத்தவரை, இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார். இதுவரை மொத்தம் 88 டெஸ்டில் 449 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இம்முறை அசத்தினால், கும்ளேவை முந்தி டெஸ்டில் அதிவேகமாக 450 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை எட்டலாம். கும்ளேவுக்கு இந்த இலக்கை எட்ட 93 போட்டி தேவைப்பட்டது. இதுதவிர, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கும்ளே முதலிடம் வகிக்கிறார். இவர் 111 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அஷ்வின் இம்முறை 23 விக்கெட் வீழ்த்தினால் கும்ளேவை முந்தி 'நம்பர்-1' இடம் பிடிக்கலாம். அஷ்வின் இதுவரை 89 விக்கெட் சாய்த்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement