Load Image
Advertisement

பறவைகள் கணக்கெடுப்பு பணி மாணவ, மாணவிகள் உற்சாகம்

அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு, வனத்துறை மற்றும் நம் தாமிரபரணி இயக்கம் சார்பில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி கால்வாய், பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆராய்ச்சியாளர்கள் என 200 பேர் பங்கேற்று 7 குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம், கால்தடம், கூடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர். தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கும் 60 குளங்கள் 5 நீர் தேக்கங்களில் கணக்கெடுப்பு பணியில் மாணவர்கள் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement