Load Image
Advertisement

இந்தியாவுக்கு கிடைக்குமா 'ஹாட்ரிக்' வெற்றி

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இந்துாரில் நடக்கிறது. இதில் அசத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் கடைசி பந்தில் 'திரில்' வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வேகமாக வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை வசப்படுத்தி கோப்பை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 24ம் தேதி இந்துார், ஹோல்கர் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணிக்கு துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து, இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில் ரன் மழை பொழிகிறார். ஆனால் அணியின் 'மிடில் ஆர்டர்' தான் பலவீனமாக உள்ளது. சமீபத்தில் 4 போட்டியில் 3 சதம் விளாசி அசத்திய 'சீனியர்' கோஹ்லி, முதல் இரு போட்டியில் 11 ரன், 8 ரன் மட்டும் எடுத்தார். தவிர தொடர்ந்து சான்ட்னர் சுழலில் அவுட்டாகிறார். சொந்தமண்ணில் உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், இப்பிரச்னைக்கு கோஹ்லி விரைவில் தீர்வு காண வேண்டும். ஸ்ரேயாஸ் இல்லாத நிலையில் பின் வரிசையில் வேகமாக ரன் சேர்ப்பார் என நம்பப்பட்ட சூர்யகுமார், 2 போட்டியில் 32 ரன் மட்டும் எடுத்தார். அடுத்தடுத்த தொடர் உள்ள நிலையில் இவரது இடத்தில் ரஜத் படிதருக்கு வாய்ப்பு வரலாம். தவிர இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, 'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர், பேட்டிங்கில் ரன் எடுத்தால் நன்றாக இருக்கும். பந்துவீச்சில் இந்திய அணியின் 'வேகங்கள்' முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் நம்பிக்கை தருகின்றனர். ஆறுதலுக்கு முயற்சி ஒருநாள் தொடரில் டாம் லதாம் தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 'ரெகுலர்' கேப்டன் வில்லியம்சன் இல்லாமல் பேட்டிங் தடுமாறுகிறது. ஆலென், கான்வே, பிலிப்ஸ் உட்பட அணியின் 'டாப்-6' பேட்டர்கள், கடைசியாக களமிறங்கிய 30 இன்னிங்சில் 7 முறை தான் 40, அல்லது அதற்கும் மேல் ரன் எடுத்துள்ளனர். ஏற்கனவே தொடரை இழந்து விட்ட போதும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் சவால் கொடுக்க முயற்சிக்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement