Load Image
Advertisement

மாஜி எம்பி கொலை சொந்த தம்பி கைது

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர், வயது 66. 1995 முதல் 2001 வரை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். திமுக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் பொறுப்பையும் வகித்தார். கடந்த டிசம்பர் 21ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் புறப்பட்டார். காரை அவரது தம்பி மருமகன் இம்ரான் ஓட்டினார். கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது மஸ்தானுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்தனர். அவர் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் கூறினர். அப்பா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகன் ஹரிஸ் ஷா நவாஷ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் மஸ்தான் கொல்லப்பட்டது தெரிய வந்தது. கார் டிரைவர் இம்ரான், அவரது உறவினர்கள் தமீம் சுல்தான், நசீர், தாபிக் அகமது மற்றும் லோகேஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மஸ்தானிடம் 15 லட்ச ரூபாய் கடனாக வாங்கியிருந்தேன்; பணத்தை திரும்ப கேட்டதால் கொலை செய்தேன் என இம்ரான் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மஸ்தான் கொலை செய்யப்படுவதற்கு முன் அவரது தம்பி ஆதம் பாஷாவுடன் இம்ரான் அடிக்கடி பேசியது தெரியவந்தது. ஆதம்பாஷாவிடம் போலீசார் விசாரித்தபோது, சகோதரர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்தது தெரியவந்தது. மருமகனும் நானும் சேர்ந்து மஸ்தானின் வாய், மூக்கை அழுத்தி, மூச்சு திணறடித்து கொன்றோம் என ஆதம் பாஷா வாக்குமூலம் அளித்தார். அவரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement