Load Image
Advertisement

பிரதமர் பாதுகாப்பில் குறைபாடா? கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் உள்ள ஹூப்ளியில் Hubballi 26வது தேசிய இளைஞர் திருவிழாவை துவங்கி வைக்க பிரதமர் மோடி சென்றார். ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று பிரதமரை மக்கள் வரவேற்றனர். உடனே கதவை திறந்து கார் படிக்கட்டில் நின்றபடி பிரதமர் மோடி மக்களை பார்த்து கையசைத்தார். அப்போது, ஒரு ஆசாமி ஓடி தடுப்பை தாண்டி வந்தார். பாதுகாப்பு அதிகாரிகளையும் தாண்டி மோடியை நோக்கி ஓடிவந்தார். மோடி கழுத்தில் மாலை போட முயன்ற அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். ஆனால் மோடி பதற்றம் அடையவில்லை. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே அந்த வாலிபரிடம் இருந்து மாலையை வாங்கிக் கொண்டார் மோடி. இந்த சம்பவத்தால் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக விமர்சனம் எழுந்தது. அதை கர்நாடக போலீஸ் மறுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு ஏற்படவில்லை. மாலையுடன் வந்த நபரிடம் விசாரிக்கிறோம் போலீஸ் தரப்பு தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement