Load Image
Advertisement

தெய்வ பற்று இல்லாதவர்களுக்கு அறங்காவலர் பதவி தரக்கூடாது

கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே 75 உத்தரவுகளை ஐகோர்ட் பிறப்பித்து இருந்தது. அவற்றை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. பல உத்தரவுகளை அமல்படுத்திவிட்டதாகவும், சில உத்தரவுகள் குறித்து விளக்கம் தேவை எனவும் அரசு தெரிவித்தது. அறங்காவலர் தேர்வுக்கான விண்ணப்பங்களில், அரசியல் சார்பு குறித்த பகுதி ஏன் இடம் பெறவில்லை? என, நீதிபதிகள் கேட்டனர். அரசியல் சார்பு உடையவர்கள், தெய்வ பக்தி உடையவராக இருந்தால், அவரை அறங்காவலராக நியமனம் செய்யலாம் என கோர்ட் கூறியிருக்கிறது. அதனால், விண்ணப்பத்தில் அந்த கேள்வி இடம் பெறவில்லை அரசு வக்கீல் பதில் அளித்தார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர், அரசியல் சார்பு உள்ளவரா? இல்லையா? என்பதை அறியும் வகையில் விண்ணப்பத்தில் கேள்வி இடம் பெற வேண்டும் என்றனர். தெய்வ பக்தி இல்லாத எவரையும், கோவில் அறங்காவலர்களாக நியமனம் செய்ய அனுமதிக்க முடியாது. அறங்காவலர் தேர்வுக்கு மாவட்ட அளவிலான குழு அமைத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement