Load Image
Advertisement

மக்கள் ID திட்டத்தை கைவிட வேண்டும்

ஆதார் கார்டு போல தமிழகத்திற்கென 'மக்கள் ID எண்' கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாஜ மாநில துணைத்தலைவர் நாராயணன் அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளார். மக்கள் ஐடி திட்டம் குழப்பத்தைதான் ஏற்படும். நலத்திட்டங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு என்று கூறப்பட்டாலும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன், மக்கள் நலத்திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. ஆனால் தற்போது, ஜன்தன் வங்கி கணக்கு, ஆதார், மொபைல் இணைப்பு மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக சென்று சேருகிறது. போலி பயனாளிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம், 8 ஆண்டுகளில் அரசுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமானது. தமிழக அரசு கொண்டுவரும் மக்கள் ஐடி திட்டம், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், போலி பயனாளிகள், ஊழல் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மீண்டும் துளர்த்து எழுந்து மோசடி செய்யத்தான் வழிவகை செய்யும். தற்போதுள்ள ஆதார் நடைமுறையை தமிழக அரசு பலப்படுத்த முன்வரவேண்டும் என்று நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement