Load Image
Advertisement

மும்பை டு -நாக்பூர் எக்ஸ்பிரஸ்- வே ₹55,000 கோடியில் பிரமாண்ட சாலை

மகாராஷ்டிராவில், மும்பை டு -நாக்பூர் இடையே விரைவுச்சாலை திட்டம் 2015ல் அறிவிக்கப்பட்டது. 2018 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மும்பை JNPT துறைமுகத்தில் தொடங்கி, நாக்பூர் ஏர்போர்ட் வரை 701 கிமீ நீளத்திற்கு 6 வழிச்சாலையாக அமைகிறது. "மகாராஷ்டிரா சம்ருத்தி மஹாமார்க்" என பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாக்பூர் முதல் ஷீரடி வரை 520 கிமீ சாலை பணி முடிந்துள்ளன. வரும் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஷீரடியிலிருந்து மும்பை வரையிலான சாலை அடுத்தாண்டு ஜூனில் திறக்கப்படும். மும்பை டு- நாக்பூர் செல்வதற்கான பயண நேரம் 16 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக குறையும். எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்க 35000 கோடி, நிலம் கையகப்படுத்த 20000 கோடி என மொத்த திட்ட செலவு ₹ 55,000 கோடி. 10 மாவட்டங்கள், 24 தாலுகாக்கள் மற்றும் 392 கிராமங்கள் வழியாக இச்சாலை செல்கிறது. 2 பெரிய துறைமுகங்கள், 48 சிறிய துறைமுகங்களை இணைக்கிறது. 3 சர்வதேச ஏர்போர்ட்கள், 7 உள்நாட்டு விமான நிலையங்களை எளிதில் சென்றடைய உதவும். ஒவ்வொரு 5 கிமீ இடைவெளியிலும் CCTV கேமராக்கள், அவசர காலத்தில் தொடர்புகொள்ள இலவச தொலைபேசி சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 40- கிலோ மீட்டர் இடைவெளியில் மின்சார வாகன சார்ஜிங் மையம் உள்ளது. அவசர சூழலில் போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் சாலை போடப்படுகிறது. சாலை நடுவே பொருத்தப்படும் சோலர் தகடுகள் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் சாலையை கடக்க ஏதுவாக 65 மேம்பாலங்கள், 6 சுரங்கப்பாதைகள், 400 சிறிய பாலங்கள் அமைக்கப்படும். பசுமை சாலை என்பதால், 12.68 லட்சம் மரங்கள் நடுவதற்கும், தேவைப்படும் இடங்களில், விலங்குகள் கடந்து செல்ல பசுமை மேம்பாலங்களும் அமைக்கப்படுகிறது. மும்பை டு நாக்பூர் விரைவு சாலையால், மகாராஷ்டிராவின் பொருளாதாரம் 36 சதவிகிதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement