Load Image
Advertisement

குமரி, குற்றாலத்தில் குவிந்த டூரிஸ்ட்கள்

சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் கன்னியாகுமரிக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகின்றனர். ஞாயிறு என்பதால் டூரிஸ்ட்களும் அதிகாலையிலேயே சூரியனை காண குவிந்திருந்தனர். மேகமூட்டம் காரணமாக சூரிய உதயத்தை காண முடியாதது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது. முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். ஞாயிறன்று குற்றாலத்திலும் டூரிஸ்ட்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். தென்காசியில் கொட்டி தீர்த்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை முதல் நீர் வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement