Load Image
Advertisement

பதவியை பறித்த பன்னீரை விட்டு விலகினார் கோவை செல்வராஜ்

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ், ஓபிஎஸ் பக்கம் போனார். கோவை மாநகர் மாவட்ட செயலராக ஓபிஎஸ் நியமித்தார். திடீரென கருத்து வேறுபாடு வந்ததால் பொறுப்பில் இருந்து செல்வராஜை நீக்கினார் ஓபிஎஸ். அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஓபிஎஸ்க்கு விசுவாசமாக இருந்தேன். ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பின் எல்லாம் மாறியது. அம்மா உயிரை விட பதவிதான் முக்கியம் என நினைத்து முதல்வர், அமைச்சர்கள் செயல்படுவது வேதனை அளிக்கிறது. கட்சியில் இருந்து விலகினேன், ஆனால் திராவிட பாரம்பரியத்தில் இருந்து விலக மாட்டேன். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என செல்வராஜ் சொன்னார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement