Load Image
Advertisement

மாணவிக்கு பளார்! ஐடி கார்டு போட சொன்னதால் ஆசிரியை கோவம் | Student Vs Teacher

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி பஸ்சில், அருகே அமர்ந்தவரிடம் , நீங்க யார் என மாணவி ஒருவர் கேட்டார். உங்க கல்லூரி ஆசிரியை தான் என பதில் வந்தது. மாணவர்களை மட்டும் ஐடி கார்டு போட சொல்லி கட்டாயப்படுத்துறீங்க. நீங்களும் போட்டா தானே, எங்களுக்கும் நீங்க யார்னு தெரியும் என மாணவி சொன்னதும், அந்த இடமே சண்டை களமாக மாறியது. ஆசிரியை மாணவி கன்னத்தில் அறைந்தார். திருப்பி அடிக்க மாணவி முயன்ற போது, மற்றவர்கள் தடுத்தனர். கல்லூரி நிர்வாகம் விசாரிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement