Load Image
dinamalar telegram
Advertisement

ஹேண்ட்பால் போட்டி மாணவிகள் அசத்தல்

கோவை நிர்மலா மகளிர் கல்லுாரி சார்பில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவிகளுக்கான ஹேண்ட்பால் போட்டி கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. 14 கல்லுாரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. நாக் அவுட் போட்டியில் சிறப்பாக விளையாடிய நிர்மலா, பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள், கோபி பி.கே.ஆர். அணிகள் 'லீக்'போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் பி.கே.ஆர். அணி 15-7 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. அணியையும், 2 வது போட்டியில் நிர்மலா கல்லுாரி அணி 21-11 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியையும் வென்றது. 3வது போட்டியில் பி.கே.ஆர். அணி 8-4 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியையும், 4வது போட்டியில் நிர்மலா கல்லுாரி அணி 25-7 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. அணியையும் வென்றது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement