Load Image
dinamalar telegram
Advertisement

₹.4.20 லட்சம் நகை பணம் கொள்ளை வீட்டுக்கும் தீவைப்பு

ராணிப்பேட்டை அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்ற நேரத்தில் மர்மநபர்கள் வீட்டை உடைத்து ₹.4.20 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளை அடித்து விட்டு வீட்டை கொளுத்தி விட்டு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு புதுத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. தனியார் தொழிற்சாலை இரவு காவலாளி. இவரது மனைவி ராணி, தூய்மைபணியாளர். நேற்று ராணி தனது உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுள்ளார் கந்தசாமி வேலைக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பிரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் ₹. 20000 பணத்தினை கொள்ளையடித்து வீட்டை தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கந்தசாமி மற்றும் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement