Load Image
dinamalar telegram
Advertisement

விழுப்புரம் பாமக து.தலைவரை வழிமறித்து குத்தி கொன்ற கும்பல்

விழுப்புரம் அருகே காப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன் வயது 45. பாமக மாவட்ட துணை தலைவர். நேற்று இரவு பனையபுரத்தில் இருந்து தனது ஊருக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஊர் அருகே வந்தபோது, 5 பேர் கும்பல் வழிமறித்தது. கத்தியால் கழுத்து, மார்பில் குத்தி கொலை செய்தது. விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். ஆதித்யனுக்கு உறவினர் ஒருவருடன் பொது இடத்தில் மண் எடுப்பது தொடர்பாக பகை இருந்தது. உறவினரே கூலிப்படை மூலம் கொலை செய்தாரா என்ற கோணத்தில், அவரை பிடித்து விசாரிக்கின்றனர். கொலையில் துப்புத்துலக்க 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement