Load Image
dinamalar telegram
Advertisement

பாஜவிடம் சரண் அடைந்த அதிமுக ஜன 17ல் அணிகள் இணைப்பு விழா!

லோக்சபா தேர்தலில் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா இல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ., இடம்பெறவே பழனிசாமி விரும்புகிறார். ஆனால் பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் இணைய வேண்டும்; அதோடு கூட்டு வைத்து 2024 தேர்தலில் வெல்ல வேண்டும் என்பது பா.ஜ. கணக்கு. இதற்காக பா.ஜ. வெற்றியை நிர்ணயிக்கும் 10 தொகுதிகளில் ஒரு தொகுதியை தினகரனுக்கு விட்டுக் கொடுத்து, அனைவரும் ஒன்றிணைய அ.தி.மு.க.விடம் பா.ஜ. மேலிடம் பேச்சு நடத்தியது. பழனிசாமி இன்னும் ஓகே தெரிவிக்கவில்லை. மாறாக தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளை இழுக்க நடந்த அவரது ரகசிய பேச்சும் தோல்வியடைந்தது. வேறு வழி இல்லாமல், பழனிசாமிக்கு பா.ஜ., நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீதான மத்திய அரசு வழக்குகள், கட்சி பொதுச்செயலர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரங்களில், தனக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என பழனிசாமி கருதுகிறார். அதற்கும் பா.ஜ. மேலிடம் ஆதரவு அவசியம் என்பதால், பிடிவாதத்தை கைவிட முன்வந்துள்ளார். பா.ஜ. விரும்பும் 10 தொகுதிகளை ஒதுக்கவும், அக்கட்சியின் அறிவுரைப்படி அணிகளை இணைக்கவும் ஆலோசிக்கிறார். ஜனவரி 17 எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் இணைப்பு விழா நடத்தப்படலாம் என்கிறது அதிமுக வட்டாரம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (6)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)
S SRINIVASAN
S SRINIVASAN - . 25-நவ-2022 13:07 IST

this is good, l welcome it, if this happened then dmk will not get any seat that is sure. pl eps and ops it is not time for ego but dmk to be defeated thsts all and shd not come again

Reply
venugopal s
venugopal s - . 25-நவ-2022 11:06 IST

இதற்கு பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அதிமுக கட்சியையே கலைத்து விட்டு பாஜகவில் ஐக்கியமாகி விடலாம்.

Reply
SUBBU,MADURAI
SUBBU,MADURAI - . 25-நவ-2022 10:47 IST

அதே போல் கூடிய விரைவில் ஜி.கே.வாசன் தன்னுடைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க போகிறார்.

Reply
மோகனசுந்தரம்
மோகனசுந்தரம் - . 25-நவ-2022 09:35 IST

அப்படி போடு. இப்பொழுதாவது பழனிச்சாமி வழிக்கு வந்தார்.

Reply
raja
raja - Cotonou,பெனின் . 25-நவ-2022 09:22 IST

கற்பனை கதை சூப்பர்... உண்மையான அதிமுக தொண்டன் மன்னார்குடி மாஃபியா கும்பலையும் திருட்டு திமுகாவுடம் விலை போன துரோகிகளையும் எடப்பாடி தலைமையில் ஆன அதிமுகாவில் இணையகூடாது என்றே விருப்ப படுகிறார்கள்...,

Reply
govindaraju
govindaraju - . 25-நவ-2022 08:59 IST

நடக்காது

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement