Load Image
Advertisement

'அரிட்டாபட்டி' எனும் 'பொக்கிஷம்' அற்புதம் நிறைந்த 'பல்லுயிர் பூங்கா'

அதிகாலை பறவைகளின் 'கீச்கீச்' இசையோசை மனதை இதமாக தலாட்டும். கண்களுக்கு எட்டிய துாரம் வரை பச்சை போர்வை போர்த்தியது போல் பசுமையான வயல் வெளிகள். தண்ணீர் நிரம்பிய குளங்கள், குட்டைகள், பூத்துக்குலுங்கும் தாமரை மலர்கள், அல்லி மலர்கள், தடுப்பணைகள், தோகை விரித்தாடும் மயில்கள், துள்ளிக்குதிக்கும் புள்ளி மான்கள், கேளை மான்கள், வயல்களில் கொக்கு கூட்டங்கள், மரங்களை வியாபித்திருக்கும் பறவை இனங்கள், விதவிதமான, அழகழகான பட்டாம்பூச்சிகள், தலதலவென தட்டான்பூச்சிகள், ஓங்கி வளர்ந்த பழமையான ஆலமரங்கள், அரசமரங்கள் என ஒரு புதுமையான, அதிசயமான கிராமம் ஒன்று கோயில் மாநகர் மதுரைக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறது. 'அரிட்டாபட்டி' எனும் அந்த அற்புத கிராமம் மதுரையில் இருந்து வடக்கே 17 வது கிலோ மீட்டர் தொலைவில் அழகு, கம்பீரம், மிடுக்கு ஒருங்கே அமையப் பெற்று பீடு நடை போட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement