Load Image
Advertisement

மனைவி கழுத்து அறுத்து கொலை MY LIFE IS OVER என கணவன் கதறல்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 43 வயது ஆசிப். மனைவி பிரியங்கா. வயது 38. 10 வருடங்கள் முன் அவர்களின் காதல் பெற்றோருக்கு தெரிந்தது. மறுப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு வந்தனர். முத்தியால்பேட்டையில் வாடகை வீடு எடுத்தனர். ஆசிப் தனியார் வங்கியில் பணி சேர்ந்தார். பிரியங்கா ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். காதல் மனைவியை ஆசிப் ஒரு நாளும் பிரிந்ததில்லை. இளம் ஜோடி போல் ஜாலியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ஏரியாவே அமைதியாக இருந்த நேரத்தில் ஆசிப் வீட்டை விட்டு வெளியே வந்தார். “my life is over. please call the police" என கத்தினார். அக்கம்பக்கத்தினர் திரண்டனர். ஆசிப் கையை பார்த்ததும் அதிர்ச்சி ஆனர். ரத்தம் சொட்ட சொட்ட கத்தி இருந்தது. பொதுமக்கள் போலீசை அழைத்தனர். ஆசிப் வீட்டில் நுழைந்த போது, பிரியங்காவை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரிந்தது. ஆசிபை கைது செய்து விசாரணை நடத்தினர். தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி சண்டை வந்துள்ளது. பிரியங்கா தன் ஆபிசில் பணிபுரியும் ஒருவருடன் ஊர் சுற்றி வந்தார். கேட்டதற்கு பாய் பிரண்டு என கூறினாராம். இந்த ஆத்திரத்தில் தான், மனைவியை கொன்றதாக ஆசிப் வாக்குமூலம் அளித்தார். விசாரணை நடக்கிறது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement