Load Image
Advertisement

2 கிலோ பிரியாணியை 18 நிமிடத்தில் முடித்த சாப்பாட்டு ராமன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் அரிசி மண்டியின் ஆண்டு விழாவை முன்னிட்டு. வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. 30 நிமிடங்களுக்குள் 2 கிலோ பிரியாணியை சாப்பிட வேண்டும். முதலில் சாப்பிட்டு முடிக்கும் வெற்றியாளருக்கு 3 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 170 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். 25 க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். அனைவருக்கும் 2 கிலோ பிரியாணியுடன் தயிர் பச்சடி மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. போட்டி ஆரம்பித்ததும் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு பிரியாணி சாப்பிட்டனர். பாபு என்ற இளைஞர் 18.18 நிமிடங்களில் 2 கிலோ பிரியாணியை முழுமையாக சாப்பிட்டு முடித்தார். மற்ற போட்டியாளர்கள் அத்துடன் சாப்பிடுவதை நிறுத்தினர். மீதம் இருந்த பிரியாணியை பக்கெட்டில் போட்டு, அவர்களுக்கு ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றியாளர் பாபுவுக்கு அரிசிமண்டி நிறுவனர் 3 ஆயிரம் பரித்தொகையை வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement