Load Image
Advertisement

கூடுதல் விலைக்கு மது விற்ற 115 ஊழியர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மது பாட்டிலுக்கும், அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள், பாட்டிலுக்கு 30 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர் என தொடர்ந்து புகார்கள் வருகின்றன. கூடுதல் விலைக்கு விற்கும் ஊழியர் மீது இடமாற்றம், அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தாண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, அதிக விலைக்கு மது விற்பனை செய்த, 1,148 ஊழியர்கள், விற்பனை குறைவாக உள்ள கடைகளுக்கும், கிடங்குகளுக்கும் இடம் மாற்றப்பட்டனர். தொடர்ந்து அதே தவறை செய்த 115 ஊழியர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் பணம் கேட்கும் ஊழியர்கள் தொடர்பாக, மது கடைகளில் விளம்பரம் செய்துள்ள எண்ணில் புகார் அளிக்கலாம் என டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement