Load Image
Advertisement

ஜெய்பீம் பட விவகாரம் சூர்யா மீது போலீஸ் வழக்கு

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் கடந்தாண்டு வெளியானது. ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக தஞ்சாவூரை சேர்ந்த கொளஞ்சியப்பன் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். எங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை எங்கள் அனுமதி இல்லாமல் படமாக எடுத்துள்ளனர். அவர்கள் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கொளஞ்சியப்பன் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு பதிவு செய்ய சாஸ்திரிநகர் போலீசுக்கு உத்தரவிட்டார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தும்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொளஞ்சியப்பன் மனு கொடுத்தார். அதைத் தொடர்ந்து, சாஸ்திரிநகர் போலீசார், ஜெய்பீம் படக்குழு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். டைரக்டர் ஞானவேல், நடிகர் சூர்யா மற்றும் படத்தை தயாரித்த 2D Entertainment நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement