Load Image
Advertisement

வைகை எக்ஸ்பிரஸ் பர்த்டே பயணிகள் கொண்டாட்டம் |Vaigai Superfast Express

மதுரை_சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1977 ஆகஸ்ட் 15 அன்று தனது பயணத்தை துவக்கியது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு, இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையை பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜ் பாதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரசுக்கு உண்டு. பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலான இது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக விளங்குகிறது. வைகை எக்ஸ்பிரசுக்கு இன்று 45வது பிறந்த நாள். இதையொட்டி, மதுரை ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் பர்த்டேவை பயணிகள் கொண்டாடினர். இன்ஜினுக்கு பூஜை செய்து, கேக் வெட்டி, டிரைவருக்கு ஊட்டி விட்டனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement