Load Image
Advertisement

தந்தையிடம் 15 லட்சம் கறக்க கடத்தல் நாடகம் போட்ட மகன்

திருநெல்வேலி தியாகராஜநகரை சேர்ந்தவர் வேல்ராஜ். தந்தை இசக்கி முத்துவுடன் சேர்ந்து தச்சு வேலை செய்கிறார். வேல்ராஜுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அவரை பார்க்க சென்ற  வேல்ராஜ் இரவு ஊர் திரும்பினார். சமாதானபுரத்திற்கு பஸ்ஸில் வருவதாக சொன்னதால், அழைத்து செல்ல தந்தை இசக்கிமுத்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால், இசக்கிமுத்து போன் செய்தார். அப்போது, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறினார். அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து நெல்லை போலீசில் புகார் அளித்தார். செல்போன் சிக்னலை வைத்து  ஊருடையார்புரம் பகுதியில் இருந்த  வேல்ராஜ் உட்பட 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.  வேல்ராஜ், நண்பர்களிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஊதாரித் தனமாக செலவு செய்துள்ளார். நண்பர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் கடனை அடைப்பதற்காக தந்தையிடம் கடத்தல் நாடகமாடி 15 லட்சம் கேட்டது தெரியவந்தது. வேல்ராஜ் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement