Load Image
dinamalar telegram
Advertisement

முதல் முறையாக விண்ணில் பாயும் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. PSLV, ஜி.எஸ்.எல்.வி.GSLV, வகை ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பிஎஸ்எல்வி 1,860 கிலோ வரையிலும்; ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், 4,000 கிலோ வரையிலும் செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் உடையவை. தற்போது, 500 கிலோ வரை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் 'ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்' என்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து முதலாவது எஸ்எஸ்எல்வி ராக்கெட், நாளை காலை, 9.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இஓஎஸ் 2, ஆசாதிசாட் ஆகிய 2 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 145 கிலோ எடை கொண்ட, 'இஓஎஸ் 2' செயற்கைக்கோள் நிலம் தொடர்பாக பூமியை கண்காணிக்க உதவும். கல்விசார்ந்த ஆசாதிசாட் செயற்கைக்கோள் 8 கிலோ எடை கொண்டது. இதற்கான சாப்ட்வேர் 75 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் உருவாக்கி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement