Load Image
Advertisement

அரசு கல்லூரிகளில் நன்கொடை மாணவர்கள், பெற்றோர் புகார்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்லுாரிகளால் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் ஆன்லைன்' வழியில் பெற்றுள்ளது. விண்ணப்பங்களை, கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை கமிட்டி பரிசீலனை செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். தரவரிசையின்படி, மாணவர்களுக்கான பாட பிரிவுகள் ஒதுக்கப்படும். இதில், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், சில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை சேர்க்கைக்கு இடம் வாங்கி தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் குழு, மாணவர், ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயர்களில், இந்த வசூல்வேட்டை நடக்கிறது. இதுகுறித்து, உயர்கல்வி துறை விசாரணை நடத்தி, நன்கொடை வசூலிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement