Load Image
Advertisement

கள்ளக்குறிச்சி கலவரம் வாட்ஸ்அப் அட்மின் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் 17-ஆம் தேதி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரம் மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடியோ ஆதாரம் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்வர்களை போலீசர் கைது செய்கின்றனர். இதனிடையே கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட கடலூர் விஜய், கள்ளக்குறிச்சி துரைப்பாண்டி,காச்சக்குடி அய்யனார் உள்ளிட்ட மூன்று வாட்ஸ் அப் குழு அட்மின்கள் மற்றும் கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதாக புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement