Load Image
Advertisement

தேசிய குத்துச்சண்டை மாலதி, கபிலனுக்கு வெண்கலம்

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் தேசிய அளவிலான 5வது ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இப்போட்டியில் பல மாநிலங்களைச் சேர்ந்த 750 வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதி போட்டிகள் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு அணியும், பெண்கள் பிரிவில் அரியானா அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. ஆண்கள் பிரிவில் அரியானா 2ம் இடமும், பெண்கள் பிரிவில் மகாராஷ்ட்ரா 2ம் இடமும் பிடித்தன. தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 57 டு 60 கிலோ எடை பிரிவில், புதுக்கோட்டையை சேர்ந்த மாலதி வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 67 டு 71 கிலோ எடை பிரிவில், சென்னையை சேர்ந்த கபிலன் வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க தலைவர் பொன்.பாஸ்கரன் விருது வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement