Load Image
dinamalar telegram
Advertisement

எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்க தடை

மாநகர் பஸ்களில் பெரும்பாலான கண்டக்டர்கள் டிக்கெட் வழங்கும்போது, எச்சில் தொட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கட்டில் உள்ள டிக்கெட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால் இப்படி எச்சில் தொட்டு பிரித்து எடுத்து பயணிகளிடம் கொடுக்கிறார்கள். சென்னையில் கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கண்டக்டர்களின் எச்சில் பழக்கம் பற்றி பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. எச்சில் தொட்டு டிக்கெட் கொடுப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் அந்த பழக்கத்தை தவிர்க்கும்படி மாநகர் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி கண்டக்டர்கள் டிக்கெட் வழங்க வேண்டும்; கண்டக்டர்களுக்கு தேவையான ஸ்பாஞ்சை பணிமனை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement