Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ வை நம்பி போகாதீர்கள் அங்கே மரியாதை கிடைக்காது

முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கிட்டத்தட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர். தன்னுடன் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், விரைவில் மும்பை சென்று கவர்னரை சந்திக்கவுள்ளதாகவும் ஷிண்டே கூறியிருந்தார். இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரே கடிதம் அனுப்பியுள்ளார். பலர் என்னிடம் பேசுகிறீர்கள்; இன்னும் நேரம் கடந்து விடவில்லை. மும்பை வாருங்கள்; ஒன்றாக அமர்ந்து பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த மரியாதை, வேறு எங்கும் கிடைக்காது. சிவசேனா குடும்பத்தின் தலைவனாக சொல்கிறேன். வந்துவிடுங்கள் என கடிதத்தில் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கவுகாத்தியில் இருந்து குஜராத்துக்கு தனி விமானத்தில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஏக்நாத் ஷிண்டே ஏற்கனவே சந்தித்தார்; அடுத்ததாக, பாஜக தலைமையுடன் பேச, டில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் உத்தவ் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement