Load Image
Advertisement

மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவு வீடியோ வெளியிட்டு சிறுமி சாதனை! | Save Soil | Sadhguru

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மண் காப்போம் இயக்கத்தை துவங்கி 100 நாள் பைக் பயணம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவை வடவள்ளியை சேர்ந்த 2 வயது சிறுமி கோபிகா, யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வருகிறாள். ஜக்கி வாசுதேவ் பயணத்தை துவக்கிய மார்ச் 21ம் தேதி, முதல் வீடியோ வெளியிடப்பட்டது. 2 வயது சிறுமி 13 மொழிகளில் பேசியும், நடித்தும் வீடியோ வெளியிட்டாள். குறைந்த வயதில் அதிக விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சிறுமியை அங்கீகரித்துள்ளது. ஜக்கி வாசுதேவ் பயணத்தை நிறைவு செய்த நூறாவது நாளில், நூறாவது வீடியோ வெளியிடப்பட்டது. 2 வயது சிறுமியின் திறமைக்கு அங்கீகாரம் அளித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement